Advertisment

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள், மேஜைகளை வழங்கிய அமைச்சர்!

Minister donates 200 seats and tables to government schools

Advertisment

திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தில் கும்பகோணம் பரஸ்பர ஸகயா நிதி லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூபாய் 10 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் 200 இருக்கை மற்றும் மேசைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி, அம்பிகாபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, செந்தண்ணீர்புரம் அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி காட்டூர், அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகவதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமராஜர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மலை கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 200 எண்ணிக்கையிலான 6 அடி நீளமுள்ள இருக்கை மற்றும் மேசைகளை பள்ளிக் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

மேலும் பள்ளி குழந்தைகளுடன் அந்த மேசைகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன், இளநிலை பொறியாளர் நரசிங்கமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் தாஜுதீன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe