அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத் துவக்க விழா திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்ற பாடல் வரிகளை பாடி இதற்கு ஏற்ப குழந்தைகளும் மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்றார். பின்னர் குந்தைகளிடம் எம்ஜிஆர் உங்களுக்கு தாத்தா, ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி என்று கூறிய அவர், அவர்கள் இருவரும் எங்களுக்கு பெரியப்பா, பெரியம்மா என்றார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலைகள் எழுந்தது.

Advertisment

minister-dindigul-Sreenivaasan-about-mgr-and-jayalalitha

இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் தினமும் விளையாடுவதன் மூலம் உடல் உறுதி படுவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் 15 முதல் 30 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக உறுப்பினராக சேர்க்கப்பட்டு அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு ஏற்படுத்தப்படும். பின்னர் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவித்தார்.