Advertisment

காலணியை கழட்டச் சொன்ன விவகாரம்... அமைச்சர் மீது சிறுவன் காவல்நிலையத்தில் புகார்! 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், அமைச்சரின் செருப்பை கழற்றிய பழங்குடி மாணவர்ராமன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார்.

Advertisment

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்த நிகழ்வின்போதுஅமைச்சர் சீனிவாசனின்செருப்பு மாட்டிக்கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை 'டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா' என கூறியதும் அருகிலிருந்த பழங்குடியினசிறுவன் அவரது செருப்பை அகற்றினான்'.

Advertisment

minister dindigul seenivasan;The boy complained to the police to minister

இந்த சம்பவம் நடந்த போது அமைச்சருடன் அருகில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகள் உடனிருந்தனர். அமைச்சரின் இந்தசெயல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது மனிதஉரிமை மீறல் எனபல்வேறு தரப்புகளில் இருந்து அமைச்சருக்கு கண்டனங்கள் குவிந்தன.

அதன்பிறகு இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த சிறுவனை தனதுபேரனாகநினைத்துதான் அப்படி செய்யச் சொன்னேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில்வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், அமைச்சரின் செருப்பை கழற்றிய பழங்குடி அந்தமாணவர்ராமன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார் அளித்துள்ளார். ஆனால்வழக்கு பதிவு செய்ய காவல்துறை தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

admk Dindigul Sreenivaasan minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe