நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில்அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்ததிலிருந்துதற்போது வரைஅதிகாரப்பூர்வமுடிவு எட்டப்படாத நிலையில், வரும் 7 -ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அ.தி.மு.க தலைமை அறிவிக்க இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தவனத்துறை அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன், "அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர்எடப்பாடி பழனிசாமி தான். அடுத்து அ.தி.மு.க ஆட்சிதான்" எனக் கூறியுள்ளார்.
தலைமையின் அனுமதியின்றி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது எனவும், 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் எனத்தலைமை தெரிவிக்கும்எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசனின் பேச்சுஅ.தி.மு.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.