Skip to main content

பழனிசாமியா..? பன்னீர்செல்வமா..? - கன்ஃபியூஸான திண்டுக்கல் சீனிவாசன்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

Minister dindigul seenivasan had confusion with Deputy chief minister name
                                                                       கோப்புப் படம்


தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு புறம் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியினருக்கு ஆதரவு கேட்டு வாக்குச் சேகரித்து வந்தால், மறுபுறம் அந்தந்தத் தொகுதி வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்துவருகின்றனர். 

 

இப்படி நேற்று திண்டுக்கல் சீனிவாசன், தன் தொகுதியான திண்டுக்கல்லில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “உங்க புருஷன் வெளியூர் போய்ட்டா கவலைப்படாதீங்க; நாங்க இருக்கோம்..”, “ஒரு சிலிண்டரின் விலை ரூ. 4,500” எனத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் உளறியது சமீபத்திய ட்ரெண்ட். அதன்படி நேற்று, திண்டுக்கல் தொகுதி, ரவுண்ட் ரோடு புதூர், குள்ளனம் பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்துவந்தார். அப்போது, ஒய்.எம்.ஆர். பட்டி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்கள் மத்தியில், “நமது துணை முதல்வர் ஓ.பழனிசாமி” என ஓ.பன்னீர்செல்வத்தை, ஓ.பழனிசாமியாக மாற்றி உச்சரித்தார். இதனால், அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் குழம்பிப்போனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

நெல்லை முபாரக்கின் பேச்சு - கண் கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Nellie Mubarak's Speech-Dindigul Srinivasan sad

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முகமது முபாரக், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரான திலகபாமா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்  நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்கள். அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் வீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என இரண்டு அமைச்சர்களும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் முபாரக் பேசுகையில், 'இரட்டை இலை சின்னம் எனது அருகில் உள்ளது. ஒன்று திண்டுக்கல் சீனிவாசன் மற்றொருவர் நத்தம் விஸ்வநாதன். எனது அப்பா 2015ல் இறந்துவிட்டார். எனது தாய் 2022 இறந்துவிட்டார். இப்படி தந்தை தாய் இல்லாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பதிலாக தந்தையும் தாயுமாக எனக்கு இரண்டு அப்பாக்கள் உள்ளனர். அதில் ஒருவர் சீனிவாசனும் மற்றொருவர் விஸ்வநாதனும் உள்ளனர். அதேபோல் அதிமுகவில் உள்ள தொண்டர்களும் என்னை அரவணைக்க உள்ளனர்' எனப் பேசினார். இவ்வாறு வேட்பாளர் பேசும்போது, தன்னையே அறியாமல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.