தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. சுகாதாரத்துறையின் உதவியுடன் அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளும் மக்களிடம் சரியாக சென்று சேர்கிறதா என்று தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்துவருகின்றனர்.
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடர்ந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துவருகிறார். அந்த வகையில், சென்னை அரும்பாக்கம் அண்ணா சித்தா மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று (11.06.2021) ஆய்வு மேற்கொண்டார். அப்போது யோகா மருத்துவமனையில் யோகாசனம் செய்து காட்டினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/mas-vst-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/mas-vst-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/mas-vst-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/mas-vst-4.jpg)