Advertisment

அதிமுக வளர்ச்சியை அமைச்சர் கெடுக்கிறார் அதிமுக எம்.எல்.ஏ அதிரடி பேட்டி!!

mla

தூத்துக்குடியில் மேலூர் கூட்டுறவு வங்கியில் தேர்தல் கடந்த மாதம் இரண்டு முறை அறிவிக்கப்படும் ரத்து செய்யப்பட்டது. மூன்றாது முறையாக நேற்றைய தினம் வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலுக்கானவாக்குகள் இன்று காலைஎண்ணப்பட்டது. அதில் ஸ்ரீ வைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ சண்முகநாதனின் ஆதரவு பெற்ற 6 பேர் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின்தலைமை கழக பேச்சாளரான எஸ்.பி கருணாநிதி தலைவராகவும், ஏ.ச துறை செயலாளராகவும் மற்றும் இந்த அணியின் 6 பேர்கள் அந்த தேர்தலில்போட்டியிட்டனர். இந்த அணியினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு மாவட்டசெயலாளர் சீனாதானா செல்லப்பாண்டியன் இவர்களின் அணியினர் தோல்வியுற்றனர். இதை அடுத்து மாவட்ட செயலாளர்செல்லப்பாண்டியன் கடம்பூர் ராஜு ஆதரவாளர்கள் வெற்றிபெற்ற அணியை சேர்ந்த அம்புலிங்கம், சந்தனராஜ், பாலசுப்ரமணியம் என்றமூன்று உறுப்பினர்களையும் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

சம்பவ இடத்திலிருந்த ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது, கட்சியின் உண்மையான தொண்டர்கள், கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் எனது அணியின் சார்பில் போட்டியிட்டனர். ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்டசெயலாளர் சீனாதானா செல்லப்பாண்டியன் இவர்கள் இருவரும் கட்சியினரை நிறுத்தாமல் தங்களுக்கு வேண்டியவர்களை பொறுப்புக்கு கொண்டுவருவதற்காக போட்டியிட வைத்தனர். ஆனால் எங்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.எனவேஇவர்கள் பதவி ஏற்க விடக்கூடாது என்பதற்காக எங்கள் அணியின் மூன்று உறுப்பினர்களை அவர்களது ஆதரவாளர்கள் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஓபிஸ்ஸும் , இபிஎஸ்ஸும் சிறப்பாக ஆட்சி நடத்துகின்றனர் ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும்மாவட்ட செயலாளர் சீனாதானா செல்லப்பாண்டியன் ஆகியோரால்அதிமுகவின் வளர்ச்சியை தடைபடுகிறது என பேசினார்.

Advertisment
Kidnapping kadamburraju elections cvsanmugam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe