ADVERTISEMENT

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி...

04:59 PM Jun 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கரோனாவால் இறந்த சம்பவமும், அமைச்சர் கே.பி.அன்பழகன், கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாலும் தமிழக அமைச்சர்கள் பலருக்கும் கரோனா பயம் சூழந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த சில தினங்களாக வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்ததினால் சென்னையிலேயே இருந்து வந்தார். இதனால் அவருக்கும் கரோனா தொற்று தாக்கியிருக்குமோ என தகவல்கள் பரவியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது திண்டிவனம் இல்லத்திற்கு திரும்பிய அமைச்சர் தன்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதினால் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார்.


இது தொடர்பாக எந்த விளக்கம் அவர் தரவில்லை. இந்த சூழலில், மீண்டும் உடல் பரிசோதனைக்காக சென்னைக்கு இன்று புறப்பட்டு வந்தார் சண்முகம். டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது. அதே சமயம், அமைச்சரின் உடல்நிலை குறித்து திட்டமிட்டு வதந்திகள் பரபரப்பப்பட்டன. அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை பரப்பும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டும் வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் கரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்று மருத்துவ குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறான தகவல்கள் என்று திண்டிவனத்திலுள்ள அமைச்சரின் நேர்முக உதவியாளர் ராஜராமன் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT