/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cv-sanmugam-in.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த மழையால் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை தற்போது 44 அடியை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து இன்று அமைச்சர் சிவி.சண்முகம் விவசாய பாசனத்திற்காக 110 கன அடி தண்ணீரைதிறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)