Advertisment

எம்ஜிஆரும்,ஜெ-வும் கட்சியில் யாரையும் முன்னிறுத்தவில்லை!!- அமைச்சர் சிவி.சண்முகம்

விழுப்புரம் சட்டக்கல்லூரி கட்டிட பணிகளை பார்வையிட்ட சட்டத்துறைஅமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisment

minister cv sanmugam interview

அதிமுக கட்சி தொண்டர்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்தின் மூலம் இரைட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளது.தமிழ்நாட்டில் பி.ஜே.பி கட்சிதான் எல்லாவற்றையும் செய்கின்றனஅதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தினால்தான் தமிழ்நாட்டில் சிறுபான்மையர்களின் வாக்குகளை அதிமுக பெற முடியவில்லை. தமிழ்நாட்டில் அதிமுகதோல்விக்கு இதுவே காரணம்.

அதிமுகவின்தலைமைக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் யாரையும் முன்னிறுத்தவில்லை. அவர்களின் மறைவுக்கு பிறகு கோடானகோடிதொண்டர்களாகிய அவர்களின் முடிவின்படிதான் முதல்வரும்,துணை முதல்வரும் கட்சியில் செயல்படுகின்றனர் என கூறினார்.

Viluppuram interview CV Shanmugam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe