Minister collects votes before filing nominations

Advertisment

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக சிட்டிங் அமைச்சர் விஜயபாஸ்கரும் தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேகத்துடன் இறங்கிவிட்டார் அ.தி.மு.க.வேட்பாளர் விஜயபாஸ்கர். கரூர் அருகே உள்ள கோடாங்கிப்பட்டி என்ற பகுதியில் உள்ள அருள்மிகு பட்டாளம்மன், முத்தாலம்மன் கோவிலில், சனிக்கிழமை காலை எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரையுடன் இணைந்து, சாமி தரிசனம் செய்தார். பிறகு, கோடாங்கிபட்டி காலனியில் வசிக்கும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். மேலும், அவர் நடந்தும் ஸ்கூட்டரில் சென்றும் வாக்காளர்களிடம் தனது சாதனைகளைக் கூறி ஒட்டுக் கேட்டார். வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பே வாக்காளர்களைச் சந்திப்பதில் வேகம்காட்டிவருகிறார் விஜயபாஸ்கர்.