Advertisment

'பூமிதான நிலத்தை மீட்டு பட்டா கொடுத்த முதல்வர்'-கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு

Minister Chakrapani's speech at the village council meeting, 'chief Minister who reclaimed the land and gave the lease'

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் சத்திரப்பட்டி ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக மாற்றுமரங்களை அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற பிரதிநிதிகளும், உறுப்பினர்களும் நடவேண்டும்.

Minister Chakrapani's speech at the village council meeting, 'chief Minister who reclaimed the land and gave the lease'

Advertisment

அதேபோல் தும்மலபட்டி, கேதையறும்பு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு அம்பிளிக்கை, கொத்தையம் பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். அதன் மூலம் விவசாயிகளுக்கு மின்சாரம் நல்ல முறையில் கிடைக்கும். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் வந்தபோது 930 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கொண்டு வந்து செயல்படுத்த இருப்பதாககூறியிருக்கிறார். இப்படி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். உங்களுக்கு என்ன தேவையோ நாங்கள் செய்யவும் தயாராக இருக்கிறோம். மாவட்ட நிர்வாகம் தற்போது நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமாக பூமிதான நிலத்தை எடுத்து இந்த 16 மாதத்தில் ஆயிரம் பேருக்கு பட்டா கொடுக்கவும் முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார்'' 'என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், ஒன்றியக் குழு பெருந்தலைவர் அய்யம்மாள்,ஒன்றியக் குழு துணைத் பெருந்தலைவர் காயத்ரி தேவி தர்மராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா பழனிச்சாமி,ஊராட்சி மன்ற தலைவர் சாரதா சிவராஜ், துணைத் தலைவர் முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சிக்காரர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

TNGovernment Sakkarapani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe