தமிழக உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, “அரிசி கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனஎச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில் 'பொது விநியோகத் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தெரிய வந்தால் 1800-425-5901, 1967 ஆகிய கட்டணமில்லா எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு ரேஷன் அரிசிக் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்”எனத்தெரிவித்துள்ளார்.