Skip to main content

நுகர்பொருள் கிடங்கில் அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

Minister Chakrabarty's surprise inspection of consumer goods warehouse!

 

ஒட்டன்சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கியில் திடீரென உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ''வரும் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தப் பொங்கல் தொகுப்பில் குறிப்பிட்டுள்ள பொருட்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை என இருபது வகை மளிகைப் பொருட்கள் தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியவை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

 

Minister Chakrabarty's surprise inspection of consumer goods warehouse!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் 288 பகுதிநேர கடைகள் என ஆகமொத்தம் 1,035 நியாய விலைக் கடைகளில் உள்ள 6 லட்சத்து 64 ஆயிரத்து 970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் 40 சதவீத அளவுக்கு வரப்பெற்று நியாய விலைக் கடைகளுக்கு 23ஆம் தேதிமுதல் அனுப்பப்பட்டுவருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் மளிகைப் பொருட்களின் தரம், எடை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மளிகை தொகுப்புகளை எடை குறைவின்றி நியாய விலைக் கடைகளுக்கு விரைந்து அனுப்பிட கிடங்கு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

 

Minister Chakrabarty's surprise inspection of consumer goods warehouse!

 

இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட கலெக்டர் விசாகன், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜாமணி உள்ளிட்ட அதிகாரிகளும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.