டெல்லியில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (25.06.2025) நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதில், “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2670.64 கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் எடைபோடும் இயந்திரத்தை கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்து பொருட்கள் வழங்குவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்படும் கால தாமதத்தை தவிற்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

Advertisment

இதற்கான இணைப்பு முறையை அமல்படுத்திட 31.03.2026 வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத் தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 2024-25 காரிஃப் பருவக் கொள்முதல் அளவை 16 இலட்சம் டன்னிலிருந்து 19.24 லட்சம் டன்னாக உயர்த்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisment


இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கனிமொழ, திருச்சி சிவா, அரசு முதன்மைச் செயலாளர் சத்ய பிரத சாகு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் த. மோகன்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பா. முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாம்பழ விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme) செயல்படுத்திடகோரி மத்திய வேளாண்மை - உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு எழுதியுள் கடிதத்தை, அமைச்சர் சக்கரபாணி மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை நேரில் சந்தித்து வழங்கினார். அதோடு இப்பிரச்சனைக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.24