Minister BDR Palanivel Thiagarajan's car attacked by BJP... Tension at the airport!

Advertisment

ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் (24) உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று அவரது உடலானது விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இயக்குநர் அலுவலகம் முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அங்கு பாஜகவினர் மரியாதை செலுத்த வந்த நிலையில், முதலில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகுதான் மற்ற கட்சிகள் அஞ்சலி செலுத்த முடியும் எனத் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளுமுள்ளுஏற்பட்ட நிலையில் அஞ்சலியை முடித்துக் கொண்டு புறப்பட்ட அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனின் வாகனம் மீது பாஜகவினர் காலணியை எறிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.