Skip to main content

அமைச்சர் மற்றும் டிஜிபி பதவி விலகலா?

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
vijaya


குட்கா ஊழலில் அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இன்று தீர்ப்பளித்தது. இதனை அரசியல்கட்சிகள் வரவேற்றுள்ளன. தீர்ப்புக் குறித்து பேசிய ஜெ.அன்பழகன், "குட்கா ஊழலில் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை கோரினேன். கோரிக்கை நியாயமானது என நினைத்து உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது" என்கிறார்.

இந்தநிலையில், குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் பதவி விலக வேண்டும் என்கிறார் மு.க.ஸ்டாலின். சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டிருந்த சமயத்தில், சென்னை கலைவானர் அலுவலகத்தில், சுகாதாரத்துறையில் தேர்வுச்செய்யப்பட்டிருந்த மருந்தாளுநர்களுக்கு பணியாணை வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடியுடன் கலந்துகொண்டிருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். தீர்ப்பின் விபரம் அவரிடம் தெரிவிக்கப்பட்டவுடன், மூடு அவுட் ஆகியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

சுகாதாரத்துறை தொடர்பான விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், பொது வாழ்க்கையில் இருக்க கூடியவர்கள் மீது குற்றச்சாட்டுகளும், அதுதூறுகளும் புணையப்படுவது வழக்கமான ஒன்று, கூடுதலாக துடிப்புடன் செயல்பட்டால் அதிக அவதூறுகளை பரப்புவார்கள். அவதூறுகளை பரப்புவது எதிர்கட்சிகளின் பணி, மக்கள் நலனுக்காக பணி செய்வது எங்கள் வேலை, மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என அவர் கூறினார்.

இந்த நிலையில், விழா முடிந்ததும் கோட்டைக்கு கிளம்பிய முதல்வர் எடப்பாடி, மூத்த அமைச்சர்களிடம் தீர்ப்பு குறித்து ஆலோசித்திருக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அரசு பதவியில் நீடிப்பது சட்டநெறிகளுக்கு முரணானது என்கிற நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி இடைநீக்கம்; தேர்தல் ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Suspension order of Telangana DGP revoked for Meeting with CM  Revanth Reddy;

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம், தேர்தல் விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அவர் மீண்டும் அவரது பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

டீக்கடையில் குட்கா விற்பனை; 3 பேர் கைது; 26 கிலோ பறிமுதல்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Sale of Gutka at Tea Shop; 3 arrested; 26 kg seized

 

தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ளதோடு பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவ்வபோது  ரகசிய தகவலின் பெயரில் பெட்டிக்கடை, மளிகைக் கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், எட்வரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.