ADVERTISEMENT

பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணிகளைத் துவங்கிவைத்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

01:05 PM Jul 26, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் உள்ளே பாதாள சாக்கடைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பதால் அவற்றை சரிசெய்ய தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், அதனை 65 வார்டுகளிலும் சீரமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு இன்று (26.07.2021) அதற்கான துவக்க விழா உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்பணிகளைத் துவங்கி வைத்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்குப் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 377.21 கோடி மதிப்பீட்டில் 3 பணிகளும் மற்றும் 335.07 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்சி நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் 1987 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதோடு கசிவு ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நகர திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் 18 வார்டுகளில் முழுவதுமாக 16 வார்டுகளில் பகுதியாகவும் மொத்தம் 34 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை மறு சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டு, 201 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் 210 கி.மீ நீளமும், பிரதான கழிவுநீர் குழாய் நீளம் 7.24 கி.மீட்டரும், 7 லிப்டிங் ஸ்டேஷன்களும் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 55,155 வீடுகளுக்கு இணைக்கப்படவுள்ளது. புதிய கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படுவதால் இனி மழைக் காலங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT