/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ssi-knnehru.jpg)
திருச்சி நவல்பட்டு, எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தபோது கீரனுார் பள்ளத்துப்பட்டி மணி என்பவரால், விஜய் நகர் ரயில்வே பாலம் அருகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரின் உடலானதுதுப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், திருவெறும்பூர், நவல்பட்டு, சோழமாநகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, எஸ்எஸ்ஐ-யின் மனைவி கவிதா, மகன் குகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது முதல்வர் அறிவித்த 1 கோடி உதவித் தொகையானது விரைவில் உங்களுக்கு வழங்கப்படும் என அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ssi-sivarasu.jpg)
அவருடன் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ கே.என். சேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அவரைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அரசு அறிவித்தபடி உங்களது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)