
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பார் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாகத் தொடங்கியது. இதனை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
முன்னதாக, கோவில் மாடுகள் வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்து மாடுபிடி விரர்களை உற்சாகப்படுத்தியது. சுமார் 400 ஜல்லிக்கட்டு காளைகள் இதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டு, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கினர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்த வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த முதல் 10 காளைகளுக்குத் தங்க நாணயத்தைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்குப் பின்னர் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது. அதேபோல் கூத்தப்பர் ஊராட்சியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.