Advertisment

மத்திய அரசுக்கு எதிராகத் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர்

 minister anbil mahesh who launched the campaign for the central government

Advertisment

திருச்சி கிழக்கு தொகுதியில் 65வது வார்டு ஏர்போர்ட் புதுத்தெரு பகுதியில்‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சியைத்துவக்கி வைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மக்களிடம் அரசின் திட்டங்களை விளக்கி கலந்துரையாடினார்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று பெண்களிடம் வழங்கிய அமைச்சர், தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறியதோடு குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்தார்.

“மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதையெல்லாம் மீறி ஒரு நல்லாட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இதனை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் எடுத்து கூறி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மத்திய அரசு வஞ்சித்தாலும் தொடர்ந்து தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும்” என்று கூறினார்.

Advertisment

அப்போது அமைச்சரிடம் தமிழக அரசின் திட்டங்கள் பயனுள்ளதாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ், பகுதி கழகச் செயலாளர் மணிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன்மற்றும் பகுதி, வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe