Advertisment

ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு!  

Minister Anbil Mahesh who inspected the oxygen production company

Advertisment

ஆக்சிஜன் தயாரிக்கும் தனியார் உற்பத்தி நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையமானது திருச்சி தஞ்சை சாலையில் உள்ள புதுக்குடி என்ற இடத்தில் 'சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

Advertisment

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அருகில் மாவட்ட மருத்துவமனைகள் அனைத்திற்கும் விநியோகம் செய்து வரும் அந்நிறுவனத்தின் உற்பத்தித் திறன் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் தற்போது உள்ள நிலைமையை சமாளிக்க உற்பத்தியின் அளவை அதிகரிப்பது குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Minister Anbil Mahesh who inspected the oxygen production company

தற்போது 50 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 100 சதவீதம் முழுமையாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பபடுவதாகவும் அமைச்சர் அவர்களிடம் கூறினார்.

உற்பத்திக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் உற்பத்தியை பார்த்துக் கொள்ளவும்,அவ்வாறு இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

factory thiruchy oxygen anbil poyyamozhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe