Skip to main content

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை; நிறைவேற்றிய அமைச்சர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Minister Anbil Mahesh started the city bus operation in response to public demand

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாறை பேரூராட்சி பகுதி மக்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக கூத்தைப்பாறை பேரூராட்சி வரை அரசு மாநகர பேருந்து இயக்கக் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக கூத்தைப்பாறை நோக்கி புதிய மாநகர பேருந்தை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்டக் குழு துணைத் தலைவரும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி, கூத்தைப்பாறை பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தைப்பாறை பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல், போக்குவரத்து கழக அதிகாரிகள் பொது மேலாளர் சக்திவேல்,  கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், கிளை மேலாளர் பால் கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர்

சார்ந்த செய்திகள்

Next Story

“பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை தடுக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள்” - துரைவைகோ

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Vote the matchbox to prevent privatization of public sector enterprises says Durai Vaiko

ரம்ஜான் பண்டிகையையொட்டி திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் துரைவைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் அந்த பள்ளி வளாகத்துக்கு நேரில் சென்று இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, வேட்பாளர் துரைவைகோ பேசும்போது, எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் கருணையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வாழ பிரார்த்திக்கிறேன் என்று கூறிவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, திருச்சி துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மதியம் திருச்சி பெல் குடியிருப்பு வளாகத்தில் மாலையில் திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் பனையக்குறிச்சி, குவளக்குடி பகுதிகளிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சென்று துரைவைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவில், தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பூரண கும்பமரியாதை கொடுத்தனர். பிரச்சாரத்தின் போது, அவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் குருக்கள் விபூதி, குங்குமம் பிரசாதமாக வழங்கினார். மேலும் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தாா். அவருக்கு தேவாலயத்தினர் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிரசாரத்தின் போது துரைவைகோ பேசும் போது கூறியதாவது:- ஒரு காலத்தில் திருச்சி பகுதி மக்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்த பெல் தொழிற்சாலை நலிவடைந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி பொதுத்துறை நிறுவனங்களின் நிலை இதுதான். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்க முயன்ற போது, வைகோ போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார். இதனால் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களில் விளக்கு ஏற்றியவர் வைகோ. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் பெல் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

பிரச்சாரத்தில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ சேகரன், மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா மாவட்ட மதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Next Story

“அ.தி.மு.கவினர் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை” - துரை வைகோ

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Durai Vaiko says The ADMK government is not competing to win

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய மதிமுக கட்சிக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சி சார்பாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோவின் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியினை காண்போம்...

துரை வைகோ திருச்சிக்காரர் இல்லை. அதனால் இவருக்கு போய் ஓட்டு போட வேண்டுமா என்று எதிர்க்கட்சிக்காரர்கள் விமர்சனம் வைக்கிறார்களே?

“நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவன். தமிழ்நாட்டு பிரச்சனைகள், தமிழ்நாட்டு உரிமைக்காக என் கட்சித் தலைவர் வைகோ மற்றும் மதிமுக இயக்கம் உழைத்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு தொகுதி கொடுக்கிறார்கள். எனக்கு சொந்த ஊர் தென்காசி. அது ஒரு தனித்தொகுதி. சட்டப்படி அந்த தொகுதியில் நான் நிற்க முடியாது. திருச்சி தொகுதி ஒருவேளை கொடுக்காமல் இருந்து விருதுநகர் தொகுதி கொடுத்திருந்தால் விருதுநகரில் நின்றிருப்பேன்

மக்கள் சேவையாற்ற வேண்டுமென்றால், எந்த ஊர், எந்த மாநிலம் என்றெல்லாம் தேவையில்லை. பெரிய ஆளுமையான அன்னை தெரசா ஐரோப்பியாவில் இருந்து இந்தியாவிற்கு சேவை செய்ய வந்தவர். அதே நேரத்தில் உள்ளூர்காரர்கள் எல்லாம் இங்கு நல்லது செய்து விட்டார்களா? தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் தகுதியின் அடிப்படையில் தான் வாக்களிக்க வேண்டும் என்றும், அவர்களின் சாதியைப் பார்த்தோ மதத்தைப் பார்த்தோ வாக்களிக்கக் கூடாது என்று தான் மக்களிடம் கூறி வருகிறேன். எதிரணியினர் வேறு எதுவும் குற்றச்சாட்டு வைக்க முடியாத காரணத்தினால் இதை வைக்கிறார்கள்”.

ஒரு களத்தில் இருக்கக்கூடிய எதிரணியினர், நான் இந்த ஊரைச் சார்ந்தவன் என்றும் இந்த சமூகத்தைச் சார்ந்தவன் என்றும் வாக்கு கேட்பார்கள் அல்லவா?

“அதனால்தான் சொல்கிறேன், ஜாதி மதம் இவற்றையெல்லாம் கடந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று, வேட்பாளர் படித்திருக்கிறார்களா? அவரது குற்றப் பின்னணி என்ன?, இவர்கள் வந்தால் நமக்கு நல்லது செய்வார்களா? என்பதை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்”.

எதிரணியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க வேட்பாளர் சின்னம் ஏற்கெனவே மக்கள் மனதில் பதியக்கூடிய சின்னம். இது அவர்களுக்கு நல்வாய்ப்பாக அமையாதா?

“களத்தில் என்னை எதிர்க்கிற எதிரணி வேட்பாளர் யார்? அவரது தொழில் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் முன்ன மாதிரி இல்லை. அதனால் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்”. 

Durai Vaiko says The ADMK government is not competing to win

அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் விஜயபாஸ்கர், அதிமுக சார்பாக யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஐந்து பவுன் தங்க நகை பரிசு அறிவித்திருக்கிறாரே?

“அ.தி.மு.கவைப் பொறுத்தவரை நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் அடுத்த தலைவர் என்று மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க தலைவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு அடுத்து பெரிய கட்சி நாங்கள் தான் என்று கூறி வருகிறார்கள். மேலும், இந்தத் தேர்தலை அவர்கள் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை, இரண்டாம் இடத்தை பிடிப்பதற்காகத்தான் போட்டியிடுகிறார்கள். இது அவர்களுடைய விரக்தியை காண்பிக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது. பா.ஜ.க.வை விட அதிக வாக்கு எண்ணிக்கை பெற வேண்டும் என்றும், பா.ஜ.கவை மூன்றாம் இடத்துக்கு தள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க இருக்கிறது. அதனால் அவர் அறிவித்ததை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை”.

வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா சொல்கிறாரே?

“100 வாக்குகள் பெறப்போகும் வேட்பாளர் கூட நான் தான் வெற்றி பெறுவேன், எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கூறி வருகிறார். அதே போல் தான்,  எதிரணியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க வேட்பாளரும், விஜயபாஸ்கரும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், பிரச்சாரத்தின் போது ஒரு இடத்தில் கூட, எதிரணியில் இருக்கக்கூடிய வேட்பாளர் பற்றி நான் பேசியது கிடையாது. நான் மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன்? என்று கூறி தான் வாக்கு கேட்டு வருகிறேன். அதே போல், மக்களும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள்” என்று கூறினார்.