Minister Anbil Mahesh who started the canal and area cleaning process

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் தூர்வாரும் பணியைத் துவக்கினார். திருச்சி தெற்கு மாவட்டம் திருவறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் அண்ணாநகர், நவல்பட்டு பகுதியில் தூர்வாரும் பணியைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கிவைத்தார்.

Advertisment

10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி, சூரியூர், உப்பாறு இடங்களில் தொடங்கி, சோழமாதேவி, உய்யகொண்டான் வாய்க்கால்வரை நடைபெறவுள்ளது. இந்த வாய்க்கால் தூர் வாரப்படுவதால் அண்ணாநகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதையும், வெள்ள பாதிப்பையும் சரி செய்ய, மக்களை வெள்ள அபாயங்களில் இருந்து காக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் துரித நடவடிக்கையால் நிதி ஒதுக்கி துவக்கினார்.

Advertisment

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாரியப்பன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி, நவல்பட்டு சண்முகம், கயல்விழி, மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.