ADVERTISEMENT

“மகிழ்ச்சியா, பயப்படாம எழுதுங்க...” - மாணவர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! (படங்கள்) 

11:28 AM May 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன. இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் தேர்வறைகள் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தி தேர்வு எண்கள் ஒட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. காலை 10.00 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மதியம் 01.15 மணிக்கு நிறைவு பெறும்.


இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை செயின்ட் ரபேல் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைச் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாணவர்களிடம், “மகிழ்ச்சியாக, பயப்படாமல் தேர்வு எழுதுங்கள்” என கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT