Skip to main content

பொதுமக்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Minister Anbil Mahesh celebrated Equality Pongal with the public

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார். திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு பகுதியில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர்கள் முன்னிலையில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்தப் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சமத்துவப் பொங்கல் வைத்து, பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, அப்பகுதியில் உள்ள ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இதனையடுத்து அப்பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 ஆவது வார்டு நியாயவிலைக் கடை பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அப்பகுதியில் உள்ள 1365 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.  இந்த விழாவில் கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் ஜெயராமன், திருச்சி கிழக்கு தாசில்தார் குணசேகரன், கூட்டுறவு சார்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் சகிப்புல்லா, அமராவதி மேலாளர் கபிலன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்