/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_83.jpg)
தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொற்கிழிகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன் ரவீந்திரன், தேசிங்கு ராஜா, பெர்னாடிசாமிநாதன், விஷ்ணுவரதன், சையத் சாகிப், அல்லாஹ் பிச்சை, ரஞ்சித்,கண்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக நன்றியுரை மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் நிகழ்த்தினார்.
நிகழ்வுகளைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. தற்போது உடற்கல்வி உதவி ஆசிரியர்கல் 3000 பேருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து. அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்வரின் உத்தரவைப் பெற்று அவர்களுக்கும் பணி வழங்கப்படும். விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது குறித்து இரண்டு கட்சித் தலைவர்களும் கலந்து பேசி தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)