/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamaraja3333.jpg)
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் 54,627 ஹெக்டேர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. திருவாரூரில் 1,111 வீடுகள் இடிந்துள்ளன. 30 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் 168 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது." என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)