Advertisment

பேக்கரி கடைக்குள் புகுந்த மினிவேன்; மூன்று பேர் உயிரிழப்பு

nn

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகன மோதி நிலைதடுமாறிய சிறிய ரக சரக்கு வாகனம் பேக்கரி கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியாம்பட்டி கிராமத்தில் விஆர்எஸ் என்னும் பேக்கரி செயல்பட்டுவருகிறது இந்நிலையில்கோவையிலிருந்து மதுரை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. வேனை சோழவந்தானை சேர்ந்த ராம்குமார் என்பவர் ஓட்டி வந்தார். வேன் வந்து கொண்டிருந்த பொழுது பேக்கரி அருகே இருவர் டூவீலரில் வந்துள்ளனர்.

Advertisment

அப்பொழுதுவலதுபுறம் வந்த இருசக்கர வாகனம்திடீரென இடது புறமாக திரும்பியுள்ளனர். இதனால் மீன் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் பயணித்த காளியாத்தாள் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து வேனானது பக்கத்திலிருந்த விஆர்எஸ் பேக்கரிக்குள் புகுந்தது. பேக்கரியில் டீ குடிப்பதற்காக நின்றுகொண்டிருந்த ரவிச்சந்திரன் அவரது நண்பர் பழனிசாமி ஆகிய இருவர் மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

incident ottanchadram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe