Skip to main content

வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து- மலைவாழ் மக்கள் 5 பேர் பலி 

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
l1


பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ள குருமலை காட்டு பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் இன்று கோட்டூர் சந்தையில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் 15 பேர் வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து  இதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் கேட்டும்  அவ்வழியாக நீண்ட நேரம் யாரும் செல்லாததால் விபத்து ஏற்பட்டது தெரியவில்லை.  பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அங்கு விரைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சன்னாசி மல்லப்பன் ராமன் மற்றும் வெள்ளையன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பலியாகினர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

 இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  குருமலை காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் வாரம் ஒருமுறை இவர்கள் 35 கிலோமீட்டர் நடைபாதையாக வந்து பின்னர் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று அதே போல் பொருட்களை வாங்கிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆற்றில் இறங்கிய கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு; வால்பாறையில் சோகம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023
4 college students lost their lives in the river; Tragedy in Valparai

                                                                 கோப்புப்படம் 

 

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த ஐந்து கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்மையாகவே நீர்நிலைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் ஆற்றுப் பகுதிக்கு  5 கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், ஆற்றில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளனர். இதில் 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு மாணவனின் உடலை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   

 

 

Next Story

யானை தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழப்பு - பீதியில் கண்ணன் குழி எஸ்டேட்

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

elephant attack - Kannan Kuzhi Estate in panic!

 

தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள வால்பாறையின் கண்ணன் குழி எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதி மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் மேலும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அதிரப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் கண்ணன் குழி எஸ்டேட்டில் சமீப காலமாகவே காட்டுயானை ஒன்று சுற்றிவருகிறது. இந்நிலையில் அப்பா மற்றும் தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் 5 சிறுமி சென்று கொண்டிருந்த பொழுது காட்டுயானை வருவதைக் கண்டு அலறியடித்து மூவரும் தப்பிக்க முயன்றனர். ஆனால் சிறுமி காட்டுயானையிடம் சிக்கிக்கொண்டார். காட்டுயானை மிதித்து அக்னிமியா என்ற அந்த ஐந்து வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சிறுமியைக் காப்பாற்ற முயன்ற சிறுமியின் தந்தை மற்றும் அவரது தாத்தா ஆகியோர் படுகாயமுற்றனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் யானையை அந்த பகுதியிலிருந்து விரட்டி சிறுமியின் சடலத்தை மீட்டனர். சம்பந்தப்பட்ட காட்டுயானையை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.