Advertisment

நிலைதடுமாறிய மினி லாரி; தூக்கி வீசப்பட்ட 5 ஆட்டோக்கள்

nn

Advertisment

மதுராந்தகம் அருகே மினி லாரி நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மோதியதில் ஆட்டோக்கள் நொறுங்கின.

மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது நிலை தடுமாறிய மினி லாரிஅருகிலிருந்த அம்பேத்கர் ஆட்டோ சங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது.

தொடர்ந்து ஐந்து ஆட்டோக்கள் மீது மோதியதில் ஐந்து ஆட்டோக்களும் கடுமையாக சேதமடைந்தது. இதில் ஆட்டோ டிரைவர்கள் சிலரும் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident lorry
இதையும் படியுங்கள்
Subscribe