MINI DOOR AUTO INCIDENT TRICHY

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் உள்ள மாயம்பாடியில் இருந்து சின்ன பக்களம் என்ற கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக, சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும், மினி டோர் ஆட்டோவில் 12 பேர் பயணம் செய்தனர்.

அத்துடன், நெய்வாசல் எனும் கிராமத்தில் உள்ள 8 பேர், அதே துக்க திகழ்ச்சிக்கு செல்ல காத்திருந்தனர். அந்த மினிடோர் ஆட்டோ வந்தவுடன், அதில் ஏறிக்கொண்டனர். அனைவரையும் ஏற்றிக் கொண்டு சின்ன பக்களத்தை நோக்கி ஆட்டோ வந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, டாப்- செங்காட்டுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், பொன்னுலிங்கம் என்பவரது மனைவி வசந்தா (வயது 40) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

படுகாயமடைந்த லதா (வயது 36), சம்பூர்ணம் (வயது 44), சின்னப் பொண்ணு (வயது 60), ராசாத்தி (வயது 55), பார்வதி (வயது 45) சரோஜா (வயது 45) பார்வதி (வயது 65), ரத்தினம் (வயது 35), பிச்சையம்மாள் (வயது 50) உள்ளிட்டோர் டாப்- செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.