Advertisment

'மினி பேருந்துகளின் கட்டணம் உயர்வு'-தமிழக அரசு அறிவிப்பு

'Mini buses fare increase'-Tamil government notification

தமிழ்நாட்டில் மினி பேருந்துகளின் கட்டணத்தை அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

அண்மையில் சென்னையின் புறநகர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு வழங்கி இருந்தது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மீண்டும் மினி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மினி பேருந்துகள் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மினி பேருந்துகளை இயக்குவதற்கு உகந்த முறையில் கட்டண உயர்வை மாற்றி அமைத்துள்ளது அரசு.

அதன்படி மினி பேருந்து புறப்படும் இடத்தில் இருந்து முதல் நான்கு கிலோமீட்டருக்கு 4 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆறு கிலோமீட்டர் தூரம் வரை 5 ரூபாய் கட்டணமாகவும், மினி பேருந்து புறப்படும் இடத்தில் இருந்து ஆறு முதல் 8 கிலோமீட்டர் வரை உள்ள பகுதிகளுக்கு 6 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோமீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளில் கட்டண விகிதம் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய கட்டண விகிதம் நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Transport TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe