Mini bus service from metro stations!

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/11/2021) தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு மினி பேருந்து சேவையைக் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால் இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அ. அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.