Skip to main content

ஒரே நாளில் சிக்கிய பல லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்! மூவர் கைது! 

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Millions worth of gold trapped in a single day! Three arrested!

 

சார்ஜா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரு வேறு விமானங்களில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த பயணியின் உடையில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 12.62 லட்சம் மதிப்புள்ள 245 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், துபாயில் இருந்து வந்த பயணியை சோதனை செய்ததில் அந்த பயணி பயன்படுத்திய லேப்டாப்பில் சுமார் 28.11லட்சம் மதிப்பிலான 280 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மற்றொரு பயணி கொண்டுவந்த 9 தங்க வளையல்கள் விமான நிலைய ஆண்கள் கழிவறைக்குள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 23.07 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 63.80 லட்சம் மதிப்புடைய 974.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை எடுத்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்