Millions of exotic birds; Vaduvoor Bird Sanctuary without tourists!

Advertisment

கரோனா காலத்திலும் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.அதனைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவேண்டும் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது வடுவூா் பறவைகள் சரணாலயம். வடுவூர் பறவைகள் சரணாலயத்தை தமிழகத்தின் இரண்டாவது பறவைகள் சரணாலயமாக 1996 -ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலியா, லடாக், திபெத், ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, சைபிாியா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 38 வகையான பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை சரணாலயத்திற்கு வருவது வழக்கம் .

தற்போது கரோனா துவங்கிய நாளில் இருந்து இன்றுவரை சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் சரணாலயம் வெறிச்சோடிகானப்படுகிறது. அதேவேளையில் வடுவூா் ஏரியில் இந்த ஆண்டு தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் பறவைகளின் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

Advertisment

 Millions of exotic birds; Vaduvoor Bird Sanctuary without tourists!

"செங்கால் நாரை, நத்தை குத்தி நாரை,சாம்பல் கூழை கிடா, பின்னல் கொண்டடை திரவி, ஊசி வால் திரவி, உள்ளான், வௌ்ளை அரிவாள் மூக்கன், ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், அகல வாய் திரவி உள்ளிட்ட 38 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. இனப் பெருக்கத்திற்காக வரும் பறவைகள் சரணாலயத்தில் தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து அவைகள் மீண்டும் சொந்த நாட்டிற்கே திரும்பிவிடும்.

சுமார் 2 இலட்சம் பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றது. இந்த ஆண்டு 3 லட்சம் பறவைகள் கூடுதலாக வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் இப்பறவைகளைக் காண்பதற்காக வருவது வழக்கம்.இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் வெறிச்சோடிக்கிடக்கிறது. தமிழக அரசு வனத்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு பறவைகள் சரணாலயத்தைக் காண்பதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கவேண்டும்.சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், அதோடு வடுவூா் சரணாயலம் குறித்து தமிழக அரசு போதிய விளம்பரம் செய்ய வேண்டும்"என்கிறார்கள் உள்ளூர்வாசிகளும் சமூக ஆர்வலர்களும்.