Millions trapped by flying troops!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், போலீசார் ராஜேந்திரன், சண்முகம் ஆகியோர் அடங்கிய கொண்ட குழு, கூகையூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்ன சேலத்தைச் சேர்ந்த ரைஸ்மில் அதிபர் ராசேந்திரன் (65) என்பவர் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனைச்செய்தனர்.

Advertisment

அப்போது அவர் ஆவணங்கள் இன்றி ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் கொண்டுச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, அவர் தனது ரைஸ்மில் பணிக்காக அந்தப் பணத்தை எடுத்து செல்வதாக கூறியுள்ளார். இருந்தாலும், ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சின்னசேலம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.

Advertisment

அதேபோல், மணலூர்பேட்டை - திருவண்ணாமலை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, அதே பகுதியில் உள்ள சீர்பாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எடுத்துச் சென்ற 2 லட்சத்து 24 ஆயிரத்து 540 ரூபாய் பணத்தைபறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சுமைதாங்கி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை மறித்து சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி 17 லட்சத்து 55 ஆயிரத்து 60 ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதேபோல் அரவிந்த் என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்துவதற்காக ரூ.70,000 எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதாக அந்த பணத்தையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.