அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரருக்கும் ரூ. 4 லட்சம் பெறுமதிப்பிலான கறவை மாடுகளை 'தி ரைஸ்' என்கின்ற எழுமின் அமைப்பு வழங்கி சிறப்பிக்கிறது.

Advertisment

Jallikattu

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் கூறுகையில், 'தி ரைஸ்' என்ற எழுமின் அமைப்பு உலகளாவிய தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறநாளர்களை இணைத்து சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மதுரை கிளை ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர் வாழ்வாதார வசதிகள் இன்றி வாடுவதை எழுமின் அமைப்பின் பொது கவனத்திற்கு கொண்டுவந்தது.

அதன் அடிப்படையில் அனைத்துலக எழுமின் அமைப்பு அத்தகைய வீரர்களுக்கு உதவ முடிவு செய்தது. முதற் கட்டமாக அலங்காநல்லூர் ஜல்லி்கட்டு அரங்கில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கறவை நாட்டு மாடுகளை அலங்காநல்லூர் அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று மாலை வழங்குகிறது.

எழுமின் அமைப்பின் உலகளாவிய தொழிலதிபர்கள் மலேசியா தான் சிறி டத்தோ பலன், கத்தார் பஸீத் அஹமது, சிங்கப்பூர் அஹமது புகாரி, மதுரை பெரிஸ் மகேந்திர வேல், கனடா ஸ்டன் முத்துலிங்கம், சென்னை சௌகியா குழும சிவகுமார் , சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்த கறவை மாடுகளை நன்கொடையாக தந்துள்ளனர். வீரர்கள் வாழ்ந்தால் தான் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் வாழும்.

எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர், எழுமின் மதுரை தலைவர்கள் பாலகுரு, ஜலீல், சரவணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்லதொரு தொடக்கத்தை தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்கு கறவை மாடுகள் தந்து உதவ உலகத் தமிழர்களை எழுமின் அமைப்பு அழைக்கிறது" என தெரிவித்தார்.