Advertisment

பால் லாரி மோதியதில் 20 ஆடுகள் பரிதாப பலி!

t.malai -goat - incident

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்பனந்தல் அருகில் உள்ளமடப்பட்டு கிராமத்திலிருந்து மேய்ச்சலுக்காக செங்கம் பகுதிக்கு நூற்றுக்கும் அதிகமான ஆடுகளை, அப்பகுதி விவசாயி ஒருவர் (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) சாலையோரமாக ஓட்டிச்சென்றுள்ளார்.

Advertisment

அப்படிச் சென்ற ஆடுகள் மீது செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வேகமாக வந்த பால் லாரி, ஆட்டு மந்தைக்குள் பாய்ந்ததில் 20க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானது, மேலும் பத்து ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

Advertisment

இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி உரிமையாளர் மற்றும் ஆடுகளின் உரிமையாளர் முனுசாமியிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 20 ஆடுகள் பலியானது அப்பகுதி மக்களைக் கவலையடைய செய்துள்ளது.

incident goats tiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe