
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் அந்தப் பகுதியில் பால் பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில், தனியார் வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து 1.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்தவர், பிரியாணி கடையைப் பார்த்ததும் பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவுசெய்து கடைக்குச் சென்றுள்ளார். உள்ளே போவதற்கு முன்பு பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
அவர் உள்ளே சென்றதும் மர்ம நபர்கள் அந்தப் பெட்டியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர் தனது வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவிக்கவே, போலீசார் பிரியாணி கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து பணத்தை எடுத்த நபரை கைது செய்துள்ளனர்.