Skip to main content

பால் விலை உயர்வு சரியா?அரசிடம் விரிவான தகவல் உண்டா?

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 


தமிழகத்தை ஆட்சி செய்து வரும்  அஇஅதிமுக கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 22.50 பைசா பாலின் விலை ஏற்றம் செய்யப்பட்டது. 2011இல் ஒரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 22.50 பைசாவாக இருந்தது. 2011ம் ஆண்டு ஒரு லிட்டருக்கு ரூபாய் 6.50 பைசா உயர்த்தப்பட்டது. 

 

aa

 

2014ஆம் ஆண்டு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது .   2019 ஆம் ஆண்டு இப்பொழுது ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆகவே கடந்த 8 ஆண்டுகளில் பாலின் விலை ரூபாய் 22.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் செலவு ஒரு மாட்டிற்கு 10 லிட்டர் பால் கறக்கும் மாடு சுமார் 50 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்க  வேண்டியுள்ளது. அதற்கு பராமரிப்பு செலவு ஒரு நாள் ஒன்றுக்கு மாட்டுக்கு 40கிலோ உணவு மற்றும் 40 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 5 கிலோ அடர்தீவனம் 170 ரூபாய்.     +    30கிலோ வைக்கோல் அல்லது பசுந்தீவனம் 300 ரூபாய். +   சராசரி மருத்துவ செலவு 20 ரூபாய் (170+300+20=490) 490 ரூபாய் மாட்டுக்கு  நாள் ஒன்றுக்கு செலவாகிறது.

 

50ஆயிரம் ரூபாய்க்கு குறைந்தபட்சம் 1 பைசா வீதம் வட்டி மாதம் 500 தர வேண்டி இருந்தால் ஒரு நாளைக்கு 16 ரூபாய் தர வேண்டியுள்ளது. ஆகவே ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 506 ரூபாய் செலவாகிறது. அரசு ஒரு லிட்டருக்கு கொடுக்கும் விலை அதிகபட்ச விலை SNF-8.10 (fat) இருந்தால் ரூபாய் 26.03 பைசா கொடுக்கப்படுகிறது. 10 லிட்டருக்கு (10×26.03) ரூபாய் 260.30 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள்.    506-260.30=245.70.   

 

ஒரு மாட்டுக்கு ரூபாய்  245.70 பைசா நட்டம் ஏற்படுகிறது. இதை சரி செய்வது எப்படி?   அரசு தரப்பில் ஏதாவது புள்ளிவிவரம் உண்டா? அதிகப்படியான பால் உற்பத்தி யாளர்களுக்கு பாலின் தரம்  SNF-8.0(fat) கிடைக்கிறது. இப்படி இருக்க பால் உற்பத்தி சங்கங்கள் அல்லது சேகரிப்பு மையத்தில் பராமரிப்பு செலவு, மின் கட்டணம், மையத்தில் வேலை செய்யும் வேலை , ஆட்களுக்கு சம்பளம், வாடகை, ஆகியவற்றிற்கு பால்  உற்பத்தியாளர்களிடமிருந்து  2 ரூபாய் வசூல் செய்து கொள்கிறார்கள். இதில் அதிக நட்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நுகர்வோர் இடத்தில் ஒரு லிட்டர் பால் பல தரத்தில்  விற்கப்படுகின்றன (பாக்கெட் நீலநிறம் 43 ரூபாய்,  பச்சை நிறம் 47 ரூபாய்,  ஆரஞ்சு நிறம் 51 ரூபாய்) நுகர்வோர் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதை சரி செய்ய அரசு இடத்தில் விரிவான தகவல் உண்டா?

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.