kalaingar

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று காலை வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

Advertisment

இந்நிலையில் தற்போது இன்னும் சிறிது நேரத்தில்கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்க இருப்பதால்இறுதி ஊர்வலத்திற்கான இராணுவ வாகனம் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு பூக்களால் அலங்கரிப்பட்டு வந்தது.