Advertisment

கோவையில் மிக்-21 விமானம் விபத்து... விவசாய தோட்டத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பதற்றம்!!

கோவை அடுத்த இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்21 ரகவிமானத்தின் பெட்ரோல் டாங்க் வெடித்து விவசாய தோட்டத்தில் விழுந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisment

 Mik 21 flight crashes in Kovai

 Mik 21 flight crashes in Kovai

கோவை அடுத்த இருகூர்அருகேஅத்தப்பக்கவுண்டனூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்21 ரகவிமானத்தின் பெட்ரோல் டாங்க் வெடித்து அங்குள்ள நடராஜர்விவசாய தோட்டத்தில் 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் அது விமானத்தில் இருந்து விழுந்த பகுதி என அறியாத மக்கள் ஏதோ விபத்து என அந்த பகுதியில் குவிந்து ஆச்சர்யமாக பார்த்தனர். அதன்பிறகே அது மிக் 21 விமானத்தில் இருந்து கீழே விழுந்த பெட்ரோல் டேங்க் என தெரியவந்தது.இந்த விபத்தில் கீழே விழுந்த பெட்ரோல் டேங்க் சுமார் மூன்றடி ஆழத்திற்கு அப்பகுதியில்பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தகவல் அறிந்த சூலூர் விமானப்படை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe