பொருளாதாரத்தில் கஷ்டப்படும் வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் வேலைக்காகத்தமிழகத்தை நோக்கியேபடையெடுத்து வருகின்றனர்.பானிபூரி விற்பவர்கள் முதல் ஃபாஸ்ட் புட் கடையில் வேலை செய்பவர்கள் வரைஅனைத்திலும் வடமாநிலத்தவர்கள் இருக்கின்றனர். குறிப்பாகக் கோவை, திருப்பூர் பகுதிகளில் வட இந்தியர்கள்அதிகம் காணப்படுகின்றனர்.
அங்குள்ள பனியன் கம்பெனிகள், தொழிற்சாலைகளில் இவர்கள்தான்அதிகம் பணியாற்றி வருகின்றனர். குறைந்த சம்பளத்தில்நிறைய நேரம் வேலை செய்வதால் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைத்துவட இந்தியர்களையேஅதிக எண்ணிக்கையில்வேலைக்குச் சேர்த்து வருகின்றனர் கம்பெனிமுதலாளிகள். இதனால் அவர்கள் அதிகளவில்தமிழகத்துக்குப் புலம்பெயர்கின்றனர். அதில்சில வட இந்தியர்கள் கூட்டாகச் சேர்த்துகொண்டுகொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான வட இந்தியர்கள்வந்திறங்கியுள்ளனர். இதனைரயில்வே நிலையத்திலிருந்த ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.அவர்கள் கட்டிட வேலைக்கு வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் பணிக்கு வந்தார்களா எனத்தெரியவில்லை. ஆனால், தற்போது இந்த வீடியோ காட்சிகள்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.