Advertisment

"வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்து செல்லாதீர்கள்"- முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

migrant workers tamilnadu cm palanisamy lockdown coronavirus

தமிழகத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டாம் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

Advertisment

migrant workers tamilnadu cm palanisamy lockdown coronavirus

இதுவரை (06-05-2020 முதல் 15-05-2020 வரை) 55,743 வெளி மாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரயில்களில் பீஹார், ஒடிஷா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் சுமார் 10,000 வெளி மாநிலத் தொழிலாளர்களைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாகச் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர்தம் மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளி மாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைப்பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cm edappadi palanisamy migrant workers Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe