Skip to main content

“நீயும், நானும் வேற இல்லடா...”- தமிழர் நிகழ்ச்சிக்குச் சீர்வரிசையுடன் வந்த புலம்பெயர் தொழிலாளர்கள்

 

Migrant workers came for tamilnadu Construction owner House event

 

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டுச் சுப நிகழ்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் சகோதரத்துவத்துடன் வந்து சீர்வரிசை செய்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு அவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜாமணியின் வீட்டுச் சுப நிகழ்ச்சிக்குச்  சீர் வரிசையுடன் வருகை புரிந்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக வதந்தி பரவி பல குழப்பங்களை உண்டாக்கிய நிலையில் கட்டிட நிறுவன உரிமையாளர் தனது வீட்டு சுப நிகழ்ச்சிக்குப் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்தது, அவர்களும் சகோதரத்துவத்துடன் கையில் சீர் வரிசையுடன் வந்தது என அந்த நிகழ்வே பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !