ADVERTISEMENT

'தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை அரசே செலுத்தும்'- தமிழக அரசு!

04:28 PM May 09, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். ரயில் கட்டணம் செலுத்த இயலாத வெளிமாநில தொழிலாளருக்கு தமிழக அரசே கட்டணம் செலுத்தும். தொழிலாளரின் மாநிலம் செலுத்த முடியாத பட்சத்தில் தமிழக அரசே செலவை ஏற்றுக்கொள்ளும். ரயில் கட்டணத்துக்கான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்படும்" என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


இதனிடையே கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்திற்கும், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் புறப்பட்டது. முன்னதாக அதில் பயணம் செய்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT