Advertisment

நள்ளிரவில் வேன் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு; திருமண விழாவிற்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்

midnight; Tragedy occurred while attending a wedding ceremony

Advertisment

தமிழக கேரள எல்லையான போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள அருண் என்பவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று பிற்பகல் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டுவேன்களில்திருநெல்வேலியிலிருந்து மூணாறு புறப்பட்டனர். அப்பொழுது வேன் தமிழக கேரள எல்லையான போடிமெட்டு பகுதியிலிருந்து கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது தொண்டிமலை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து மற்ற வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காயம் பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Kerala Theni
இதையும் படியுங்கள்
Subscribe