சேலத்தில், குடிபோதையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்த முதியவர், மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சேலம் அம்மாபேட்டை பாபு நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மாதம்மாள், பெருமாயி ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். மாதம்மாளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லாததால், பெருமாயியை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். இரண்டு மனைவிகள் இருந்தும் ஆறுமுகம், தனியாகத்தான் வசித்து வந்தார்.
தினமும் இரவில் ஆறுமுகம் மது அருந்திவிட்டு, தெருவில் ஆபாசமாக பேசி அலப்பறை செய்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கள் கிழமை (ஏப்ரல் 22) இரவும் ஆறுமுகம் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் அவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளி என்பவரின் மனைவியை கிண்டல் செய்துள்ளார். இதை முரளி கண்டித்தார். ஒருகட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முரளி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆறுமுகத்தை மரக்கட்டையால் தாக்கினர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முரளி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.