Skip to main content

நள்ளிரவில் நடுசாலையில் கல் வைத்து நூதன திருட்டு...சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த போலீசார்...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இருசக்கர வாகன ஓட்டிகளை நிலைதடுமாறி கீழே விழ வைக்க நள்ளிரவில் நடுசாலையில் ஒரு பெரிய கல்லை போட்டுவிட்டு நூதனமுறையில் திருட்டில் ஈடுபட்ட மதுரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

midnight robbery in Madurai...

 

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு வேலையை முடித்துவிட்டு பாஸ்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது திருப்பரங்குன்றம் பூங்கா அருகே சென்றபோது விபத்தாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார் பாஸ்கர். 

 

 

விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால் அந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அப்போது பாஸ்கருக்கு விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தன்று மர்ம ஆசாமி ஒருவன் நள்ளிரவில் நடு சாலையில் பெரிய கல்லை தூக்கி வைத்துவிட்டு அருகில் உள்ள சிறிய சுவர் மீது ஒய்யாரமாக படுத்துக்கொண்டான்.

 

midnight robbery in Madurai...

 

midnight robbery in Madurai...

 

இதனையடுத்து அந்த வழியாக வரும் வாகனங்கள் அந்த பெரிய கல்லை ஒதுங்கி கடந்து செல்கின்றன. அந்த சிசிடிவி காட்சியில் கனரக சரக்கு வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் ஒருவர் சாலையில் பெரிய கல் கிடப்பதை  சுதாரித்துக் கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தி அந்தக் கல்லை அகற்ற முயலுகிறார். அப்போது அந்தக் கல்லை நடு சாலையில் போட்ட அந்த மர்ம ஆசாமி அவரை திட்டி விரட்டியடிக்கிறான். அதனையடுத்து அந்த ஓட்டுனர் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். அதனை அடுத்து திரும்பவும் அந்த திருடன் மதில் சுவர் மேல் அமர்ந்து கொள்கிறான்.

 

midnight robbery in Madurai...

 

midnight robbery in Madurai...

 

இப்படி எதற்காகவோ காத்திருப்பது போல் அந்த திருடன் காத்திருக்கையில் அவ்வழியே வரும் இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த கல்லின் மீது மோதி தரதரவென இழுத்துக் கொண்டு கீழே விழுகிறது. அப்போது இந்த சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட திருடன் விபத்தாகி தரையில் மயங்கிய நிலையில் கிடக்கும்  பாஸ்கரின் மொபைல் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு இடத்தை விட்டு காலி செய்கிறான். 

 

midnight robbery in Madurai...

 

midnight robbery in Madurai...

 

தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் 20 நிமிடமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரை பல வாகனங்கள் அவ்வழியே கடந்து சென்றும் காப்பாற்ற முன்வரவில்லை. அதனை அடுத்து இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீட்கப்பட்ட பாஸ்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

 

midnight robbery in Madurai...

 

நள்ளிரவில் நடு சாலையில் கற்களை வைத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்ய போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கொள்ளையன் ராஜா என்பவனை கைது செய்தனர்.

 

இவன் பல இடங்களில் இதே போல் கைவரிசை காட்டி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது